உ.பி. பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவில் எம்எல்ஏவாக உள்ள அரவிந்த் கிரி மாரடைப்பால் இன்று காலமானார். லகிம்பூர் கேரி மாவட்டத்தின் கோலா கோக்ரான்நாத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர் அரவிந்த் கிரி. அவருக்கு மாரடைப்பு…

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவில் எம்எல்ஏவாக உள்ள அரவிந்த் கிரி மாரடைப்பால் இன்று காலமானார்.

லகிம்பூர் கேரி மாவட்டத்தின் கோலா கோக்ரான்நாத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர் அரவிந்த் கிரி. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், லக்னோவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும், செல்லும் வழியில் சீதாபூர் அருகில் அவர் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எம்எல்ஏ அரவிந்த் கிரி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானதாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்தத் தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் வலிமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.