நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2′ படத்தில் கமல் நடிப்பில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறார். அதன் பிறகு கமல் எச்.வினோத் இயக்கத்தில் ‘KH 233’ மற்றும் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘KH 234’ இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், கமல், அடுத்து ப்ராஜக்ட் கே படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது. இதற்காகக் கமலிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சுமார் 150 கோடி சம்பளமாக பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக தாயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் வருகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகவும் அதிகரித்துள்ளது.
சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட் டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் ரீலீஸை அமெரிக்காவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.







