யு20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் செல்வ பிரபு வெள்ளி ஒன்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் செல்வ பிரபு அவர்கள் U20 சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியத் தடகள வீரரான செல்வ பிரபுவுக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, யு20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் செல்வ பிரபுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்கா வீரர் ஹிப்பெர்ட் 17.27 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். 16.15 மீட்டர் தாண்டி செல்வ பிரபு வெள்ளியும் வென்றனர்.