‘கூகுள் மேப்’ ரூட்டில் சென்ற கார், ஆற்றில் விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கேரளாவின் கொச்சியில் கார் ஆற்றில் விழுந்ததில் இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூகுள் மேப் மூலம் கார் ஓட்டிச்…

கேரளாவின் கொச்சியில் கார் ஆற்றில் விழுந்ததில் இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூகுள் மேப் மூலம் கார் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இரண்டு இளம் மருத்துவர்கள் விபத்தில் உயிரிழந்தனர்:

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரில் பயணித்த 5 பேர் சென்ற கார் கோதுருத் பகுதியில் உள்ள பெரியாற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இளம் மருத்துவர்கள் அத்வைத் (வயது 29), அஜ்மல் (வயது 29) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த மூவரின் நிலை சீராக உள்ளது.
கனமழையாக இருந்ததால், ஓட்டுநருக்கு ஆற்றை பார்க்க முடியாமல், கார் சமநிலையின்றி ஆற்றில் விழுந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உதவினர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.