பூங்கா காவலரை கடித்த இரண்டு தலை பாம்பு – வீடியோ வைரல்!

பூங்கா காவலரை,  இரண்டு தலை பாம்பு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   அமெரிக்க உயிரியல் பூங்காக் காவலர் ஜே ப்ரூவரின் இரண்டு தலை பாம்பு பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த…

பூங்கா காவலரை,  இரண்டு தலை பாம்பு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

அமெரிக்க உயிரியல் பூங்காக் காவலர் ஜே ப்ரூவரின் இரண்டு தலை பாம்பு பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த பாம்பு அவரை கடித்தது.  இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் அந்த வீடியோவை, “இரண்டு தலை பாம்பு என்னைக் கடித்தது.  ஒரு கோபமான பாம்பைக் கையாள்வது போதும் என்று நினைத்தேன்.  ஆனால் இப்போது அவற்றில் இரண்டை நான் சமாளிக்க வேண்டுமா? இதில் ஒருவர் நிச்சயமாக மற்றவரை விட கொடூரமானவர்.  ஆனால் இருவரும் என்னைக் கடிக்க வேண்டும் என்று முடிவு செய்ததைப் போல் தெரிகிறது”என்று அவர் எழுதினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து,  9.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.  மேலும் இது அதிகரித்து வருகிறது.  அதனுடன்  22,000 லைக்குகளை நெருங்கியுள்ளது.  இது குறித் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.