ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது…

ஆரணி அருகே ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில், வாடகைக்கு விடப்பட்ட கடையை காலி செய்யும் விவகாரத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட…

ஆரணி அருகே ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில், வாடகைக்கு விடப்பட்ட கடையை காலி செய்யும் விவகாரத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக முடிந்தது.

இதில் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி தாக்கப்பட்டதுடன், கடை சூறையப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, தமிழ்நாடு டிஜிபிக்கு, வீடியோ மூலம் ராணுவ வீரர் பிரபாகர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சி ஆதாரத்தின் அடிப்படையில் கீர்த்தியை தாக்கியதாக ஹரி பிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.