31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

ரூ.900-க்கு ட்விட்டரில் ப்ளூ வசதி… இந்தியாவில் அறிமுகம்…

ரூ.900 கட்டணம் செலுத்தினால் ட்விட்டரில் ப்ளூ வசதி பெறுவது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அண்மையில் வாங்கினார். அது முதல் ட்விட்டரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரில் போலி கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என அறிவித்தார். ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ டிக் வசதியைப் பயன்படுத்தி வந்தனர். இந்த வசதி ட்விட்டரால் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத் தொடர்ந்து, ப்ளூ டிக் பயனாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய பயனாளர்கள் ப்ளூ வசதியை எளிதாகப் பெறும் வகையில் புதிய நடைமுறை ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற விரும்புவோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இடதுபுறத்தில் ட்விட்டரில் தெரியும் முகப்பு படத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் ட்விட்டர் ப்ளூ ஆப்ஷனை கிளிக் செய்து ரூ.650 செலுத்தினால் வசதியைப் பெறலாம்.

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இருவரும் மெம்பர்ஷிப்பை வாங்கலாம். ஏற்கெனவே அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ட்விட்டர் ப்ளூ வசதி உள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ வசதிக்கான விலை நாடுகளைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

ட்விட்டர் பயனர்கள் ப்ளூ வசதி சந்தாவை வெப் மூலம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆரம்பத்தில் இந்த வசதி இந்தியாவில் கிடைக்கவில்லை.  ப்ளூ மெம்பர்ஷிப்பை மாதம்தோறும் ரூ. 650ல் பெற முடியும். இதில், ஓராண்டுக்கான திட்டத்துக்கு ரூ. 6,800 செலுத்த வேண்டியிருக்கும். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ. 566.67 ஆகும். ட்விட்டர் ப்ளூ வசதி பயனர்கள் தாங்கள் பதிவிட்ட ட்வீட்களை 30 நிமிடங்களுக்குள் 5 முறை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், ஹெச்டி வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதே போல், மொபைல் வெர்சனுக்கு மாதந்தோறும் ரூ.900 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading