வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த TVK தலைவர் விஜய் | கூட்ட மிகுதியால் திரும்பி சென்றதாக தகவல்…

வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சைதாப்பேட்டை வரை வந்த TVK தலைவர் விஜய், அதிக கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றார். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தனது…

வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சைதாப்பேட்டை வரை வந்த TVK தலைவர் விஜய், அதிக கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றார்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி அவர் சென்ற கார் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தஞ்ஜின் இறந்தார். மேலும், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து காணாமல் போன வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவரது உடல் நேற்று மீட்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரபபட்டது.

அவரது உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சைதாப்பேட்டை வரை வந்த TVK தலைவர் விஜய், அதிக கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றார். விஜய் தரப்பில் புஸ்ஸி ஆனந்த், வெற்றி உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் சைதை துரைசாமியிடம் விஜய் வந்து சென்றதை தெரியப்படுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.