#TVK பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடி கைது!

தியாகராய நகரில் கைதான தவெக தொண்டர்களை பார்க்க சென்றபோது அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தையும் போலீசார் கைது செய்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

#TVK General Secretary Pussy Anand arrested in a major incident!

தியாகராய நகரில் கைதான தவெக தொண்டர்களை பார்க்க சென்றபோது அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் எழுதி இருந்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனா். மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய கடிதத்தை வினியோகம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடித நகல்களை வினியோகம் செய்தனா். அப்போது அனுமதியின்றி இதுபோல் செயல்பட்டதாக கூறி தவெகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். அப்போது அவர்களை காண தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். அப்போது புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். அவரது கைதுக்கு தவெக தொண்டர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.