முக்கியச் செய்திகள் தமிழகம்

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்- டிடிவி தினகரன்

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கு உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என டிடிவி தினகரன் கூறினார்.  ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்ட அமமுகவில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த டிடிவி தினகரன், எம்.ஜி.ஆரின் கட்சியும், சின்னமும் நயவஞ்சகர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளதாகக் சாடினார். அங்கு வேறு வழியில்லாமல் சிக்கியுள்ள தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நோக்கி வரக்கூடிய காலம் நெருங்கி விட்டது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

செய்த தண்டனைக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதால் யாரையாவது பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு உள்ளார்கள் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமியின் தவறான ஆட்சியால் ஒரு விபத்தைப்போல் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக திருந்தி இருக்கும் என்று நம்பி வாக்களித்த மக்கள் இன்று புலம்பிக் கொண்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’சிப்ஸ் பாக்கெட் கவரிலிருந்து கண்ணாடி தயாரிப்பு’ – பிளாஸ்டிக் மறுசுழற்சியில் அசத்தும் ‘ஆஷாயா’ நிறுவனம்

Web Editor

‘ஏழைகளுக்கு உதவி செய்வது குறித்து யோசிப்போம்’ – 10 கோடி பரிசு பெற்ற குமரி அரசு மருத்துவர்

Arivazhagan Chinnasamy

சிறந்த நடிகராக சூர்யா தேர்வு…விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று;

EZHILARASAN D