பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங் செய்தபோது பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பலத்த காயம் அடைந்த டிடிஎப் வாசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஒட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: