முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடங்கியது காலாண்டு தேர்வு; மீண்டும் பொது வினாத்தாள் நடைமுறை….

தமிழக அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று தொடங்குகியது.

முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் வினியோகிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நெல் கொள்முதல் விலையை ரூ. 3,000ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்

Web Editor

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

Web Editor

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?

Jayakarthi