வீலிங் அடிக்க முயன்று விபத்தில் சிக்கிய TTF வாசன்; வைரலாகும் CCTV காட்சிகள்…!

299 K/m வேகத்தில் “மஞ்சள் வீரன்” படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில்,  யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்ய முயன்று ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.        கோவையை சேர்ந்தவர் டிடிஎப்…

299 K/m வேகத்தில் “மஞ்சள் வீரன்” படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில்,  யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்ய முயன்று ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.       

கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்று, அதை தனது செல்போனில் லைவ் வீடியோவாக எடுப்பது வாடிக்கை. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஆனால் டிடிஎப் வாசன் மட்டும் ஏனோ இந்த போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை கருதிக்கொண்டு அதிவேக பயணம் மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.

இவர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது பிற இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை கண்டித்து வருகின்றனர். கடந்த வாரம் கூட அதிவேகமாக பைக் ஓட்டியதற்காக  உதகையில் டிடிஎஃப் வாசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராத விதித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் தான் TTF வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.  அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங் செய்தபோது பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த டிடிஎப் வாசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://twitter.com/devpromoth/status/1703443323715981759

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.