ஓசூர் அருகே வேன் மீது லாரி மோதல்-11 பள்ளி மாணவர்கள் காயம்

ஒசூர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் 11 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பேடப்பள்ளி…

ஒசூர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் 11 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பேடப்பள்ளி கிராமத்தில்
அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி
குழந்தைகளுடன் வேன் ஒன்று சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது சுண்டகிரி அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து
கொண்டிருந்தபோது எதிரே சென்று கொண்டிந்த லாரி மீது எதிர்பாராத விதமாக வேன்
மோதியது. இதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சூளகிரி
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காயமடைந்தவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சூளகிரியில் அவசர சிகிச்சை பிரிவில் 11 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இச்சம்பவம் குறித்து சூளகிரி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு
வருகிறனர் பள்ளி குழந்தைகள் வந்த வேன் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.