அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிய த்ரிஷா : வீடியோ வைரல்!

அமெரிக்காவில் நடிகை த்ரிஷா சைக்கிள் ஓட்டும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.  மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமான த்ரிஷா தமிழ்நாடு அரசின் பிலிம்பேர் விருதை பெற்றார். இதனை சாமி, கில்லி , திருப்பாச்சி என அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டானது. இதன் காரணமாக முக்கிய கதாநாயகிகளின் வரிசையில் த்ரிஷாவுக்கு தனி இடம் கிடைத்தது. கடந்த 2009ஆம்…

அமெரிக்காவில் நடிகை த்ரிஷா சைக்கிள் ஓட்டும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 
மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமான த்ரிஷா தமிழ்நாடு அரசின் பிலிம்பேர் விருதை பெற்றார். இதனை சாமி, கில்லி , திருப்பாச்சி என அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டானது. இதன் காரணமாக முக்கிய கதாநாயகிகளின் வரிசையில் த்ரிஷாவுக்கு தனி இடம் கிடைத்தது. கடந்த 2009ஆம் ஆண்டு விண்ணை தாண்டி வருவாயா ஜெசி கேரக்டர் அவரை நல்ல பெயர் பெற்றுத்தந்தது.
மங்காத்தா படத்துக்கு பிறகு,  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. அண்மையில்  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து, குந்தவையாக ரசிகர்களிடம் த்ரிஷா பிரபலமானார்.
தற்போது லியோ மற்றும் மலையாளத்தில் ராம் திரைப்படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக த்ரிஷா நியூயார்க் சென்றுள்ளார். அங்கு சைக்கிள் ஓட்டும் வீடியோவை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார்.இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.