திரிபுரா சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 16-ம்…

திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சியமைக்க முடியும்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. 1993ம் ஆண்டு தொடங்கி 2018 வரை கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாணிக் சர்கார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தம் 51 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 36 இடங்களில் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது நடக்கவுள்ள தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. 60 தொகுதிகளில் 48 தொகுதிகளுக்கு பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திரிபுரா முதல்வர் மானிக் சாஹா போர்டோவாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.