திரிணாமுல் எம்.பி. கோயல் முல்லக் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மேலும் பின்னடைவு…!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. கோயல் முல்லக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல், அணி மாற்றம், ராஜினாமா என அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி- யுமான கோயல் முல்லக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்படத்தக்கது.

மேற்கு வங்கத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் 208 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதே சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தானது சொந்த தொகுதியில் தோல்வியுற்றார்.

தேர்தல் தோல்வியையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் உண்டாகியுள்ளது. மொத்தம் உள்ள 80 எம்.எல்.ஏக்களில் 60 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.