திருச்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 8 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி மாணவி சுகிதா உலக சாதனை படைத்தார்.மேலும் 1 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி சிலம்ப வீரர்கள் அசத்தினர்.
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதன் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுகிதா உலக சாதனை படைத்தார்.
இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஆட்சியர் மா. பிரதீப்குமாரின் மகன்கள் மித்ரன் மற்றும் பிரஜன் ஆகிய இருவரும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இதற்கிடையே இந்த மூவரின் சாதனைகள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் துபாயில் இருந்து வருகை புரிந்த புத்தக இயக்குனர் ஐன்ஸ்டன், கார்த்தி குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் மோனிகா ரோகிணி ஆகியோர் ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழை வழங்கினர்.
இதற்கிடையே 280க்கும் மேற்பட்ட சிலம்பம் வீரர்கள் 7 மனி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
—கோ. சிவசங்கரன்







