பிரபலங்கள் பலர் சேர்ந்து வெளியிட்ட ‘சமூக விரோதி’ ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் மத்தியில் வைரல்!

பிரபலங்கள் பலர் சேர்ந்து வெளியிட்ட ‘சமூக விரோதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி’ என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.  இத்திரைப்படத்தை இயக்குநர்…

பிரபலங்கள் பலர் சேர்ந்து வெளியிட்ட ‘சமூக விரோதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி’ என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.  இத்திரைப்படத்தை இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.

இந்த ‘சமூக விரோதி’ திரைப்படத்தில் பிரஜின் .நாஞ்சில் சம்பத் கஞ்சா கருப்பு,வனிதா விஜயகுமார்,தயாரிப்பாளர் கே.ராஜன் வழக்கு எண் முத்துராம் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கலையரசன், இயக்குநர் மோகன் ஜி. அரசியல் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன், நாஞ்சில் சம்பத்,திண்டுக்கல் லியோனி போன்றோர்  இந்தப் படத்தின் டைட்டில் லுக்கைத் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு- ஜூஜூ மோன் P.S., இசை- மலாக்கி. கலை -முஜிபுர் ரஹ்மான், எடிட்டிங் – மீனாட்சி சுந்தர், ஸ்டண்ட் – பிரபு, என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றுள்ள “புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம் “என்கிற வரிகள் கவனம் ஈர்த்து வருகிறது. படக்குழு சார்ப்பில் இப்படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.