நடிகர் யாஷ் நடித்துள்ள ‘Toxic’ (டாக்ஸிக்) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெறவிருக்கும் ஒரு பிரமாண்டமான விழாவில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள டாக்ஸிக் திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் சமீபத்தில் வெளியான ‘டாக்ஸிக்’ டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




