குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து – நீராடி மகிழும் சுற்றுலா பயணிகள்!

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள்  நீராடி வருகின்றனர்.     தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்து  வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை…

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள்  நீராடி வருகின்றனர்.    

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்து  வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால்   ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட  அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து நேற்று முதல் அதிகரித்தது. மெயின் அருவியில்  மட்டும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததால் சுற்றுலா  பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு போலீசார் நேற்று தற்காலிகமாக  தடை விதித்தனர்.

இந்நிலையில் நீர்வரத்து சீரானதால் அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அங்கு குவிந்த ஏராளமான  சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே பெண்கள் குளிக்கும்  பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து வருவதால் அவர்கள் வரிசையாக நின்று  குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.