முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி!

27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை…

27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின்படி ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்ற விவரங்களை பார்க்கலாம்:

மின்பகிர்மான கழகத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபியாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பயிற்சி கல்லூரி டிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பாலநாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபியாக அபின் தினேஷ் மொடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக வினீத் தேவ் வான்கடே நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட்ஸ் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட், கரூர் மாவட்ட பிரிவு லஞ்ச ஒழிப்பு ஐஜியாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி காவல் ஆணையராக காமினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சத்ய பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தென்மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக அஸ்ரா கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாக சந்தோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக சுதாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராக கபில்குமார் சி.சரத்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாக ஜோஷி நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை பிரிவு ஐஜியாக ஜெயகவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை தலைமையக இணை ஆணையராக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக சாமுண்டீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சரக டிஐஜியாக ரம்யா பாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சரக டிஐஜியாக பகலவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை சரக டிஐஜியாக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில உளவுத்துறை டிஐஜியாக ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.