கேரளாவில் இருந்து தேனிக்கு கடத்திவரப்பட்ட மனித உடல் உறுப்புகள்! கடத்தி வந்ததன் காரணம் கேட்டு போலீசார் அதிர்ச்சி!!

மனித உடல் உறுப்புகளை கேரளாவில் இருந்து தேனிக்கு கடத்தி வந்த மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் சுற்றி திரிந்த ஸ்கார்பியோ காரை சந்தேகத்தின் அடிப்படையில்…

மனித உடல் உறுப்புகளை கேரளாவில் இருந்து தேனிக்கு கடத்தி வந்த மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் சுற்றி திரிந்த ஸ்கார்பியோ காரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது காரில் நாக்கு, கல்லீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து காரில் இருந்த மூன்று பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர்கள் கேரள மாநிலம் வண்டிபெரியாரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. பிறகு அந்த விடுதியில் விசாரித்த போது, இந்த உறுப்புகளை பத்தனம்பதிட்டா மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்ததாக தெரியவந்திருக்கிறது.

இதை பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்ததில் இந்த உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என பூஜை செய்து எடுத்து வந்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.