தக்காளி விலை கடும்வீழ்ச்சி

தக்காளி விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் தக்காளி பழங்களை செடிகளிலிருந்து பறிக்காமல் விட்டதால், அவைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து…

தக்காளி விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் தக்காளி பழங்களை செடிகளிலிருந்து பறிக்காமல் விட்டதால், அவைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். பாலக்கோடு, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் 150-ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில், கடும் விலை ஏற்றத்தில் இருந்த தக்காளி விலை, படிப்படியாக குறைந்து இயல்பான விலைக்கு கிடைக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தக்காளியின் விற்பனை விலை கடும்வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகளுக்கு அவற்றை பறிப்பதற்கான அறுவடை கூலி, வாகன வாடகை தருவதற்கான தொகை கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

இதன் காரணமாக அவர்கள், தக்காளி பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிடுவதால், அவைகள் அழுகி வருகிறது இதனால், தக்காளி நல்ல விளைச்சல் இருந்தும் அதனை பணமாக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

அண்மைச் செய்தி: “ஒரு தராசில் இருக்கும் இரு தட்டுகள்”- தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதேபோல, தங்கள் பகுதியில் தக்காளி குளிரூட்டும் மையத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அவைகளிலிருந்து பழச்சாறு, தக்காளி சாஸ், உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.