இன்று உலக முத்த தினம். மேற்கத்திய நாடுகளில் முத்த தினத்தை காதலர்களும், மற்றவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என பல தினங்கள் மேற்குலக நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் முத்த தினமும் இடம்பெற்றுள்ளது. இன்று தான் சர்வதேச முத்த தினமாகும். இங்கிலாந்தில் தான் இந்த தினம் தொடக்க காலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தை கொண்டாடுவதற்காக பொது விடுமுறையும் அளிக்கப்படுகிறது.
2000ஆவது ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச முத்த தினத்தின் பின்னணியில் உள்ள கருத்து என்னவென்றால், தங்களது இடைவிடாத பணி காரணமாக அன்புக்குரியவர்களுக்கு முத்தமிட பலர் மறந்துவிடுகிறார்கள். இதை நினைவூட்டும் விதமாகவே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நான் உன்னை பார்த்துக் கொள்ள இருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் நெற்றியில் முத்தமிடுதல், அன்பை வெளிப்படுத்தும் வகையில் கன்னத்தில் முத்தமிடுதல், மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் கையில் முத்தமிடுதல் என முத்தமிடுவதில் சில வகைகள் இருக்கின்றன.
வெளிநாடுகளில் திருமணத்துக்கு பிறகு தம்பதியர் உதட்டில் முத்தமிட்டுக் கொள்வார்கள். இது இருவரும் வேறுவேறு அல்ல; ஒன்றுதான் என்பதை உணர்த்துகிறதாம்.
பாசத்தை அதிகரிக்கவும் முத்தம் உதவுகிறதாம். முத்தம் கொடுப்பதால் உடல்நலத்துக்கு மேலும் பல நன்மைகள் இருக்கிறாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.
- உடலில் ‘மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது.
- மூளையில் ரசாயனங்களை தூண்டி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
- மன அழுத்தத்தை குறைக்கவும் பதற்றத்தை குறைக்கவும் உதவும்.
- தலைவலியை குறைக்கவும் உதவுகிறது.
- இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் கலோரிகளையும் எரிக்கவும் உதவுகிறதாம்.








