UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.   மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான…

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த தேர்வு முதல்நிலைத் தேர்வு,  முதன்மைத் தேர்வு, நேர்காணல்  என மூன்று நிலைகளைக் கொண்டது.  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.  முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர்.

இறுதியாக,  முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.  இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பப்பிற்காக கால அவகாசம் நேற்றுடன் (மார்ச் 5) முடிவடைய இருந்தது.  ஆனால் நேற்று பல மணி நேரங்களாக சர்வர் கோளாறு ஏற்பட்டது.  இதன் காரணமாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச்.6) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  இந்த நிலையில், சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.