அன்னையர் தினத்தையொட்டி, முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து செய்தியில், உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மை சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1657601776047259650
இதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து செய்தியில், தியாகத்தின் உருவமாக இருந்து நம்மை சாதனையாளர்களை மாற்றுவது அன்னையர்களே என குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/drramadoss/status/1657611941215453185
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து பதிவில், பிள்ளைகளின் முதல் கடவுள் அன்னை என குறிப்பிட்டுள்ளார். ஆக்கவும், காக்கவும் மட்டுமே தெரிந்த, அழிக்க தெரியாத கடவுள் அன்னை என்று அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/draramadoss/status/1657618204137750531
திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்தில், அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைக்க முடியாத மனவலிமையாலும் உலகம் இயங்கி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.







