அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று திடீர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில்,…

சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று திடீர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில், அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தைதான் இதுவா எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,  அரியலூர் மாவட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில்,  பாதுகாப்பு கருதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளிக்கு சென்ற மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.  மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும்,  பாதுகாப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரியலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.