டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அபார வெற்றி!

மதுரை பந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றிப் பெற்றது.  தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ்,…

மதுரை பந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றிப் பெற்றது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையான. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வாசீம் அகமது 90 ரன்களும், சஞ்சய் யாதவ் 60 ரன்களும் குவித்தனர். மதுரை தரப்பில் குர்ஜப்னீத் சிங் மற்றும் அலெக்சாண்டர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஹரி நிஷாந்த் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறினர். குறிப்பாக திருச்சியின் அபார பந்துவீச்சால் மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 16.4 ஓவரிலேயே ஆல் அவுட்டாகினர். 126 ரன்கள் எடுத்திருந்தனர். இதன்மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. திருச்சி சார்பில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ், ராஜ்குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.