முக்கியச் செய்திகள் விளையாட்டு

டிஎன்பிஎல் இறுதி ஆட்டம்-வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு?

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகிறது.

6-வது டிஎன்பிஎல் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் விளையாடுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (3 முறை) என்ற பெருமைக்குரியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆகும். லீக் சுற்றில் முதல் இரு ஆட்டங்களில் முறையே நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தங்களின் அனுபவமிக்க வீரர்களால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த 5 லீக் ஆட்டங்களிலும், அதைத் தொடர்ந்து முதலாவது தகுதி சுற்றிலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்விகளுடன் கடைசி அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு வந்தது.

வெளியேற்றுதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் மதுரையை வீழ்த்திய அந்த அணி நெல்லைக்கு எதிரான 2-வது தகுதி சுற்றில் 209 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.

இரு அணிகளும் சம பலம் வாய்ந்ததாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 4வது முறையாக சேப்பாக் அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா? அல்லது முதல் முறையாக கோவை அணி சாம்பியனாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சாம்பியன் ஆகும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைக்கும். இன்று இரவு 7.15 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram