முக்கியச் செய்திகள் விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட்: 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (tnpl) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்று பிற்பகல் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக, திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை குவித்தது.

எஸ்.ராதாகிருஷ்ணன் 81 ரன்களும், சசிதேவ் 65 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு காரணமாக இருந்தனர். இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய திருச்சி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

சந்தோஷ் சிவ் மட்டும் 59 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சேப்பாக் வீரர் ஹரீஷ் குமார் 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.
ஆட்டநாயகனாக ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய கோவை அணி 2 விக்கெட் இழப்புக்கு 16.3 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

விக்கெட் கீப்பர் ஜே.சுரேஷ் குமார் 64 ரன்களும், சாய் சுதர்ஷன் 56 ரன்களும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக ஜே.சுரேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இன்று திண்டுக்கலில் இதே மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? நீதிமன்றம் கேள்வி!

EZHILARASAN D

ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதல்!

EZHILARASAN D

‘எங்களது வேகத்தைக் குறைக்க திமுக அரசு முயற்சி செய்து வருகிறது’ – பாஜக முன்னாள் எம்.பி

Arivazhagan Chinnasamy