தமிழ்நாடு பட்ஜெட் 2022: அதிமுகவினர் வெளிநடப்பு

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், எதிர்கட்சியான அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை…

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், எதிர்கட்சியான அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டமன்ற அரங்கில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜனநாயகப் படுகொலையில் திமுக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டு; அதிமுகவினர் மீதான கைது, ரெய்டு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பி, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களின் அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும், வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஆலோசனை செய்ய சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.