அரசியல் பாக்சிங்கை பார்த்த கோபாலபுரத்தில் பாக்சிங் அரங்கம்?

அரசியல் பாக்சிங் களங்களை பார்த்த பகுதிக்கு பாக்சிங் அரங்கம் அமைத்து தரப்படுமா என்ற கேள்விக்கு இந்த ஆண்டே அமைத்து தரப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது…

அரசியல் பாக்சிங் களங்களை பார்த்த பகுதிக்கு பாக்சிங் அரங்கம் அமைத்து தரப்படுமா என்ற கேள்விக்கு இந்த ஆண்டே அமைத்து தரப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் எழிலன், கோபாலபுரம் அரசியல் பாக்சிங்குகளை பார்த்த பகுதி என்றும், அங்கு பாக்ஸிங் அரங்கம் அமைத்து தரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் மெய்யநாதன், உலக வரலாற்றில் உற்றுநோக்கப்பட்ட இடம் கோபாலபுரம் என்றும், தமிழக விளையாட்டு துறையை உருவாக்கி தந்தவர் கலைஞர் என்றும் குறிப்பிட்டார். கோபாலபுரம் விளையாட்டரங்கில் பாக்ஸிங் அகாடமி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாளையங்கோட்டையில் விளையாட்டு கிராமத்திற்கான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறும் என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.