SK25 படத்தின் டைட்டில், டீசர் நாளை வெளியீடு !

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 25 திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’அமரன்’. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 படத்தில் நடிப்பதற்க்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைகளத்தை கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார் .
மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம்
தயாரிக்கவுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்க்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘எஸ்கே 25’ திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில சூழ்நிலை காரணமாக வெளியிடவில்லை.

இந்நிலையில், ‘எஸ்கே 25’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில் சிவகார்த்திகேயன் கையில் தீ எறி குண்டுடன் இருக்கிறார். தீ பரவட்டும் என்ற வரிகள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.