‘விடாமுயற்சி’ படத்தின் ‘பத்திக்கிச்சி’ பாடலின் ரேஸிங் வெர்ஷன் வெளியீடு!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சி பாடலின் ரேஸிங் வெர்ஷன் வீடியோ வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிராக இருப்பவர் அஜித். இவர் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் அஜித் உடன் அர்ஜூன் , திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடலான ‘சவாதிகா’  வெளியாகி வைராலாகின.

இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் 2வது பாடலான ‘பத்திக்கிச்சி’ வெளியாகி வைரலானது. படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில், தற்போது ‘பத்திக்கிச்சி’ பாடலின் ரேஸிங் வெர்ஷன் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அஜித்குமார் துபாய் கார் ரேஸில் ஈடுபட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.