டைட்டானிக்கை பார்க்க சுற்றுலா சென்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீர் மாயம்!

100 ஆண்டுகளுக்கு முன்னால் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சென்ற சுற்றுலா நீர் மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.  உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின் போதே…

100 ஆண்டுகளுக்கு முன்னால் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சென்ற சுற்றுலா நீர் மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது. 

உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின் போதே கடலில் மூழ்கியது மனித குலம் மறக்க முடியாத மிகப் பெரிய துயர நிகழ்வாகும்.

1912 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதில் அந்த கப்பல் மூன்று மணி நேரங்களில் முற்றாக மூழ்கியது. அதில் அதில் பயணம் செய்த ஆயிரத்து 503 பேரும் உயிரிழந்தது உலகின் மிகப் பெரிய கடல் அழிவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆராய சென்ற நீர் மூழ்கி கப்பல் தற்போது மாயமாகியுள்ளது. போலார் பிரின்ஸ் என்ற கனடிய ஆராய்ச்சிக் கப்பலில் இருந்து 21 அடி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அதன் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை டைடானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் டைவ் செய்யத் தொடங்கினர். ஆனால் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குப் பிறகு கப்பலுடனான தொடர்பை ஆய்வு குழுவினர் இழந்தார்.

இந்தக் கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கப்பலுக்குள் 96 மணி நேரத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாகவும், கப்பலை அடையும் பணிகள் துரிதகதியில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்களில் 58 வயதான பிரிட்டிஷ் கோடீஸ்வர தொழிலதிபரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங்கும் ஒருவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

ஏறக்குறைய இரண்டரை மைல்களுக்கு கீழே இரண்டு முக்கிய துண்டுகளாக கிடக்கும் டைட்டானிக் கப்பலின் எச்சத்தை காண  சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றனர். 8 நாள் பயணத்தில் உலகின் மிகவும் பிரபலமான சிதைவைக் காண வாடிக்கையாளர்களிடம் $250,000 வசூலிக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.