அமைச்சர் கார் மீது காலணி வீச்சு-பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை

அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 3 பேரை காவலில் எடுத்து காவல்துறையினர்  ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை…

அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 3 பேரை காவலில் எடுத்து காவல்துறையினர்  ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் அவனியாபுரம் காவல்துறையால் 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய 3 பேரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த
ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி என்ற ராணுவ முகாமில்
நடத்தப்பட்ட பயங்கரவாத தக்குதலில் வீரமரணமடைந்தார்.

அவருடைய உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் உயர் அதிகாரிகள் பலர் வந்திருந்தினர். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பாஜக தொண்டர்கள் பலர் அங்கு குவிந்திருந்தனர்.

இந்நிலையில், ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்தில்
இருந்து வெளியே செல்லும்போது, அங்கு குவிந்திருந்த பாஜகவினர் திடீரென அவரது காரை மறித்து காலணியை தூக்கி வீசி அடாவடியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.