மும்மொழிக் கொள்கை : நடப்புக் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்மொழி கொள்கையில் இருந்து நடப்பாண்டு ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு ஆஜாரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,

நாடு முழுவதும் உள்ள 28,819 சிபிஎஸ்சி பள்ளிகளில் சுமார் 99 சதவீத பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. சுமார் 1.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வி ஆண்டிலேயே 6ம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்துவதிலிருந்து மத்திய அரசு பின்வாங்க போவதில்லை என தெரிவித்தார்

நீதிபதிகள்:

மாணவர்களின் வசதி மற்றும் கல்விச் சுமையை கருத்தில் கொண்டு மும்மொழிக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை அவர்களுக்கு தேவையான வசதியை தான் வழங்க விரும்புகிறோம்.

எனவே நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்சி பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், விலக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.