சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை, மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளியாகப் பார்க்க வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாடகை சீனிவாசன் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
தமிழக பாஜக சார்பில் மாநகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்து வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எல்லா துறைகளிலும் ஒரு ரேட் போட்டு பணிகள் நடந்து வருகிறது.
கோவை தெற்கு தொகுதியை குறி வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர், மக்கள் குறைகளை கேட்டு வருவதாக கேள்வி எழுப்பியுள்ளீர்கள். யார் வந்து மக்களுக்கான பணியை செய்தாலும் வரவேற்கிறோம் நாங்கள் மக்களுக்கான பணியை செய்து வருகிறோம். கோவை குண்டு வெடிப்பு, இந்து இயக்க சகோதரர்கள் படுகொலை போன்ற சம்பவங்களில் ஒரு சமூகத்தில் உள்ளவர்கள் மட்டும் ஈடுபட்டுள்ளதை அனைவரும் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு அந்த சமூகத்தவர்கள் ஆதரவு தெரிவித்தால் மீண்டும் அந்த செயலை தடுக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு மத சாயம் கொடுத்து அமைதியை கெடுக்க வேண்டாம்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை அந்த மாதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய பாஜக தலைமை இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கவில்லை என்ற ஆர்.எஸ்.எஸ் கருத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அது வெறும் பத்திரிகை செய்தி மட்டுமே தான். அடுத்த 40 ஆண்டுகளை இலக்கால வைத்து 2,3,4 ஆம் கட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிட்டு செயல்படக்கூடிய கட்சியாக பாஜக உள்ளது.
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







