11வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், 12வது மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழா கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மலேசியா நாட்டின் அமைச்சர் சிவகுமார், துணை அமைச்சர் சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் சரவணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் டான் ஶ்ரீ மாரிமுத்து, செயலாளர் நந்தன் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிறைவு விழாவில் உரையாற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான் ஶ்ரீ மாரிமுத்து கூறியதாவது, “11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு உதவிகள் செய்த மலேசிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 12வது உலகத்தமிழ் மாநாடு சிங்கப்பூரில் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நடத்துவதற்கும் கோரிக்கைகள் வந்துள்ளது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த சென்னை மண்டல தலைமை செய்தியாளர் சிரில் தேவாவின் காணொலியை காண…







