தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த பேராலயத்தின் 441 ஆவது ஆண்டு திருவிழா திருப்பலியுடன் தொடங்கியுள்ளது.
அதனைத்தொடர்ந்து கொடி பவனி நடைபெற்றது. ஆலயத்தின் முன்புள்ள கொடிக்கம்பத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கொடி ஏற்றினார். அப்போது, பனிமய அன்னையை வேண்டி பக்தர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. விழாவில், அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மற்றும் திரளானோர் பங்கேற்றனர்
தொடர்ந்து மாலையில், திருப்பயணிகளுக்காக சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் 1,400 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேராலய வளாகம் மற்றும் தோ் பவனி நடைபெறும் வீதிகளில் 50 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைக் கண்காணிக்க நான்கு உயா் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.







