“வெள்ளை டி-சர்ட் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இதுதான் காரணம்!” – ராகுல் காந்தி!

“வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமையும்தான் காரணம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி…

“வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமையும்தான் காரணம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் வெள்ளைச் சட்டை அணிவதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில்,

“பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.!

ஏன் எப்போதும்  ‘வெள்ளை டி-சர்ட்டை’ அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் வெளிப்படைத்தன்மையை குறிக்கிறது. எனக்கு திடத்தன்மை மற்றும் எளிமையை வழங்குகிறது.

எங்கு மற்றும் எப்படி இந்த மதிப்புகள் உங்கள் வாழ்வில் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன்’ எனக் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இந்த கேள்விக்கு விளக்கமளித்திருந்தார். அப்போது, நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.