கோரிக்கைகளை தெரிவியுங்கள். இது எனது அரசல்ல நமது அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம்,தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது ஒலி ,ஒளி தொலைக்காட்சி வானொலி பதிவகத்தை தொடங்கி வைத்து , பவள விழா மலர், திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் பேசியதாவது :
16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது தருமை ஆதீன மடம் . அன்று முதல் இன்று வரை ஆன்மீக சேவை , சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த பவள விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. செப்டம்பர் மாதம் திராவிட மாடல் பவள விழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பு இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தருமை ஆதீனத்திற்கும் எங்களுக்கும் குடும்பத் தொடர்பு உண்டு.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என நினைக்கும் கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை .
தருமபுரம் ஆதீனம் போன்ற பல்வேறு ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது போதுமானது. அறநிலையத்துறையை மிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம்.
வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி.
கோரிக்கைகளை தெரிவியுங்கள். இது எனது அரசல்ல நமது அரசு” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.







