தஞ்சை அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மனோஜ்பட்டியில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து ஏழு வீடுகளில் இரண்டு கொள்ளையர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அதில், ஒருவன் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு முகம் தெரியாமல் மறைத்துக் கொண்டான். மற்றொருவன் ஒரு வீட்டின் வாயிலில் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்ததும் அவனும் முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடியே, சிசிடிவியால் அடையாளம் காணப்பட்டு விடுவோம் என்கிற அச்சத்தில் திருடாமல் இருவருமே சென்று விட்டனர்.
இது குறித்து, மானோஜிப்பட்டி மக்கள் மருத்துவ கல்லூரி காவல்நிலையத்திலும், தமிழ்ப்பல்கலைகழக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
—கா.ரு்பி.







