32.8 C
Chennai
May 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது: கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

நாடாளுமன்றம் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 
கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான  கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
2 கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பப்படி பாஜக உடனான கூட்டணி முறிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர்கள் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. தொண்டர்களின் உணர்வுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மதிப்பளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமையும். மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, மாநில உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கூறுவது நடக்காது. பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்து விடும் என்பது கவனத்தைத் திசை திருப்பும் செயல்.
2026 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம்.
ஆந்திரா போன்று பல்வேறு மாநிலங்களில் எங்களை போல் பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தாமல் கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ளன என்றார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, முதிர்ந்த ஒரு அரசியல் கட்சி எந்த நிலையிலும் ஒரு கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என அதிமுக கேட்காது என கே.பி.முனுசாமி பதில் அளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading