ஃபிரையர் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி: ஜூன் 26ஆம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மகளிர் ஃபிரையர் கோப்பை டி20  கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் 26ஆம் தேதி தொடங்குகிறது.  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மகளிர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் கொண்ட…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மகளிர் ஃபிரையர் கோப்பை டி20  கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் 26ஆம் தேதி தொடங்குகிறது. 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மகளிர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் கொண்ட ஃபிரையர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் கிரீன் இன்வேடர்ஸ், சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ், பிங்க் வாரியர்ஸ், புளு அவெஞ்சர்ஸ், யெல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஆரஞ்சு டிராகன்ஸ், பர்ப்பில் பிளேசர்ஸ் என பெயரிடப்பட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
டி20 தொடர் போட்டிகள் இந்த மாதம் 26 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் போட்டிகள் அடுத்த மாதம் 1 ஆம் தேதியும் தொடங்கவுள்ளன. இதில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகள் தமிழ்நாடு சீனியர் மகளிர் அணி, U23, U19 மற்றும் U15 உள்ளிட்ட அணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.
போட்டிகள் அனைத்தும் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் விதிமுறைப்படி  நடைபெறவுள்ளது.  மேலும் சிறந்த பேட்டர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த ஆல் ரவுண்டர்,  அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர், நம்பிக்கை வீரர்,  தொடரின் சிறந்த வீராங்கனை உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த வீரர்களை கண்டறிந்து அவர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க  ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.