அவசர கதவு வழியாக ஏறி ரயிலில் இடம் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ!

ரயிலில் ஜன்னல் கதவு வழியாக ஒரு பெண் ஏறி இடம் பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தை அதிகமாக பரவி வருகிறது. வழக்கமாகவே முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் இடம் பிடிப்பதற்கு கடினமாக இருக்கும். குறிப்பாக திருவிழா…

ரயிலில் ஜன்னல் கதவு வழியாக ஒரு பெண் ஏறி இடம் பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தை அதிகமாக பரவி வருகிறது.

வழக்கமாகவே முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் இடம் பிடிப்பதற்கு கடினமாக இருக்கும். குறிப்பாக திருவிழா காலங்கள், முகூர்த்த நாட்கள் வந்துவிட்டால், கூட்ட நெரிசல் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும். வாக்குவாதங்களையும், சண்டை காட்சிகளையும் பரவலாக பார்க்க முடியும்.  ஏனெனில் முன்பதிவு இருக்கைகள் நிரம்பியபின்பு, ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ள முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைகளுக்கு போட்டியிடுவதே காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஆன்லைன் டோக்கனை ரத்து செய்ய வேண்டும்; காளை உரிமையாளர்கள் கோரிக்கை | பின்னணி என்ன?

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ரயிலில் அவசரகால ஜன்னல் கதவு வழியாக ரயிலுக்குள் நுழையும் வீடியோ காட்சி, சமூக வலைத்தளத்தில் வெளியானது.

அந்த வீடியோவில் பிளாட்பாரத்தில் நிற்க இடம் இல்லாத அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலர் ரயில் தண்டவாள பகுதியில் கீழே நின்றபடி ரயில் வந்து நின்றதும் எதிர்புறம் இருந்தும் ஏறி இடம் பிடிக்க போட்டி போடுகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் இளம்பெண் ஜன்னல் வழியாக ரயிலுக்குள் நுழைகிறார். மேலும்,  இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.