மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு. வெங்கடேசன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளது:
இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளது. நாட்டை ஒரு குறிப்பிட்ட கடவுளாக உருவகப்படுத்தும் பாடலைப் பாட மறுத்தால், நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்பது கூட கேள்விக்குறியாகிறது.
கோடிக்கணக்கான மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தாலும், இந்த உத்தரவுக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீது ஏவப்பட்டிருக்கும் நவபாசிச ஆயுதமாகவே ‘வந்தே மாதரம்’ பாடல் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




