நாளை வெளியாகிறது ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் டிரெய்லர்!

பிஎஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில்…

பிஎஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம்  53வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்றதுடன், 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இதன் வாயிலாக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது.

இப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.