ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்.7ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.  பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மிகப்பெரிய…

ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்.7ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.  பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இந்த திரைப்படம் ரூ.1200 கோடி வசூலித்தது.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி.  இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார்.  மேலும், இப்படத்தில் விக்கி கெளஷல்,  சதீஷ் ஷா,  தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.  பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு டன்கி பிளைட் முறையில் சென்ற ஒருவரின் கதையைத் தழுவி உருவாகியுள்ள படத்தில் ஷாருக்கான்,  டாப்ஸி இன்னும் சிலர் லண்டன் செல்ல விரும்புவதாக டிரைலரில் காட்டப்படுகிறது.

கழுதைப் பயணம் என்று சொல்லப்படுகிற இந்த முறை மேற்குலக நாடுகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக அனுப்பப்படும் இந்தியர்களின் பயணத்தைக் குறிக்கிறது.  இதனை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வரும் 21-ம் தேதி வெளியாக உள்ளது….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.